கொக்கட்டிச்சோலை விடுதிக்கல்லில் பலத்த காற்றால் வீட்டுக்கு சேதம்

(படுவான் பாலகன்)  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையொன்று பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது.. 

குறித்த பகுதியில்  புதன்கிழமை(24) பிற்பகல் வீசிய பலத்த காற்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காற்று வீசும் போது வீட்டில் 55வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம் முதியவர் மட்டுமே இவ்வீட்டில் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை.