முல்லைத்தீவில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 1 1 மணிக்கு முல்லைத்தீவில் நடைபெற்றது

வருடம்தோறும் தமது வேலைத்திட்டம் தொடர்பில் இளைஞர்கள் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இவ்வருடத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் இனி நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி கு. சறோஜா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிக்குமார் முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதன் போது முல்லைத்தீவு மாவட்டம் தற்போது தேசியரீதியில் போட்டியிட்டு சாதனைகளை நிலைநாட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் இளைஞர் யுவதிகளின் ஈடுபாட்டை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்