மட்டக்களப்பு படுவான்கரையில் அதிசயம் ஆனால் உண்மை.

இஞ்ச பாருங்கோ நம்மட படுவான்கரையைப்பற்றி எல்லோருக்கும் தெரியும்தானே வீரம்விளைநிலம்,யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம்,நமது பண்பாடு பழக்கவழக்கங்களை கட்டிக்காக்கும் ஊர்கள்,மட்டக்களப்பு மண்ணுக்கே சோறு போடும் பிரதேசம் இப்படிப்பட்ட பிரதேசத்தின் கல்விநிலையினைப்பார்த்தால் சரியான பரிதாபம் பாருங்கோ..

என்ன செய்வது சரியான வளங்களும் இல்லை முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர்களும் இல்லை இப்படி இருக்கக்கூல எதுவித பதில் ஆட்களும் இல்லாமல் மட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்த 7 கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்களை ஒரேயடியாக தூக்கி அம்பாறைக்கு போட்டுவிட்டாங்க பாருங்கோ.

மட்டக்களப்புக்குள்ள போட்டாலும் பரவாய் இல்லை வேறு மாவட்டத்திற்கு போட்டு இருக்காங்க , அவங்க என்ன செய்தாலும் செய்யட்டும் எங்கட மடியிலதானே கைவைச்சி விட்டாங்க.

ஏற்கனவே எங்கட வலயம் 98வது இடத்தில இருக்கு இப்படி இருக்க ஆட்களையும் தூக்கினால் நம்மட பிள்ளைகளின் நிலையை யோசித்துப்பாருங்கோ.

படுவான்கரையான் மடையன்,இது 100வீதம் தமிழ் ஆட்கள் வாழ்கின்ற பிரதேசம்தானே நம்ம விரும்பினமாதிரி எதுவும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க அப்படி கேட்டாலும் நம்மட மாகாணசபை உறுப்பினர்களை ஐயா, ராசா,தம்பி, அண்ணன், சேர் என்று சொல்லி பேய்க்காட்டி விடலாம் என்று நம்மட முதலமைச்சேர் சேரும்,கல்விக்குப்பொறுப்பான ஐயாவும் நினைத்துவிட்டார்களோ தெரியாது.

எப்படித்தான் இருந்தாலும் இதை நாங்க சொல்லுகிறோம், கதைக்கிறோம் என கோபிக்கக்கூடாது… கூத்துக்காரர்கள் மாதிரி கழுத்தில் மாலையைப்போட்டுத்து முதலமைச்சருக்கு பின்னால திரிஞ்சி தலையை அசைக்காமல் எங்கட படுவான் கரை மக்களின் கல்வியிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கோ இப்படி சொல்லுவது மனதுக்கு கஸ்டமாகத்தான் இருக்கு என்ன செய்வது வருகிற எலக்சனையாவது கவனத்தில் கொண்டு இந்த இடமாற்றத்தை நிறுத்தித்தாங்கோ, இல்லாட்டி பதிலுக்கு யாரையாவது போட்டுத்தாங்கோ எங்கட மக்கள் உங்களுக்கு நன்றிக்கடனாக எப்போதும் இருப்போம் ஏன கூவான் கோழியும் கொட்டைப்பாக்கான் குருவியும் ;மணற்பிட்டி வயல் ஓரத்திலிருந்து கவலையுடன் கதைத்து கொண்டிருந்தது மாத்திரமன்றி வேண்டுகோளையும் முன்வைத்தார்கள்.பாவம் அந்த வாயில்லா சீவனுகளுக்கு இருக்கிற அக்கறைகூட நம்மட ……………………… இல்லையே.