ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை வெளிநாட்டில் வசித்த முக்கிய சந்தேக நபர் இன்று மட். நீதிவான் நீதிமன்றில்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் மற்றுமொரு சந்தேக நபர் இன்று மட் நீதவான் நீதிமன்றில் குற்றபுலனாய்வு பொலிஸாரால் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்..

ஏற்கனவே வெளிநாட்டில் வசித்து வந்த குணதிலக்க என்ற சந்தேக நபர் குறித்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்று தெரிவிக்கபட்டது.

மட் நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில்இவரே இன்று

குற்றப்புலனாய்வு துறையினரால் இவர் ஆஜார்படுத்தப்பட்டார்

குறித்த கொலை வழக்கு விசாரணை தற்போது மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தில் நடாத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு இதற்கு மேலதிகமாக 7.6.2017 மேல் நீதி மன்றத்தில் ஆஜார்படுத்துவதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக கட்டளை இடுமாறு விசேட குற்றப்பபிரிவு பொலிஸாரால் மன்றில் பிரேரனை முன்வைக்கப்பட்டது. குறித்த சந்தேக நபர் மன்றில் கூற்றொன்றை தெரிவிக்க விரும்புவதாக கூறியதையடுத்து இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மா.கணேசராஜா 5.6.2017 அன்று சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக மன்றில் ஆஜார்படுத்துமாறும் அன்றைய வரை அந்நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டாார்