பிக்கு உட்பட பட்டதாரிகள் நால்வர் கைது

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் உட்பட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த கிழக்கு மாகாண சபை அமர்வின் போது மாகாண சபை வாளாகத்தின் முன்பாக மேற்கொள்ளபட்ட ஆர்ப்பாட்டத்தினை நிறுத்துவதற்காக நீதிமன்றத்தினால் விதிக்கபட்ட தடை உத்தரவினை அவமதித்த குற்றத்தின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரையும் திருகோணமலை நீதிமன்றில்  இன்று செவ்வாய்க்கிழமை  காலை முன்னிலைப்படுத்தியபோதே குறித்த பிக்கு உட்பட நால்வரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.