இளைஞர் மத்தியில் சமூக நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பம்

மனித அபிவிருத்தி தாபனமும், கொழும்பு, அமெரிக்க உயர் ஸ்தானிகர் அனுசரணையுடன் இளைஞர்களுக்கு சமூக நல்லிணக்கம் தொடர்பான செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது. இத்திட்டமானது Right to Education for Youth in Ampara District – ( REYAD)   என பெயர் இடப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காரைதீவு  விபுலானந்தா மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சந்திரேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 100 பாடசாலை மாணவர்களும் இன்நிகழ்வில் பங்குபற்றினர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் அசார்டீன், அம்பாறை மாவட்ட பெண்கள், சிறுவர் பெலிஸ் பிரிவின் தலைமைக்காரியாலய அதிகாரிகள், தேசிய அபாயகார ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வட,கிழக்கு பொறுப்பாளர் திரு.ஏ.காலித், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.எஸ்.விஜயதாஸ், பாடசாலை ஆசிரியர்கள், மனித அபிவிருத்தி தாபனத்தின் உத்தியோகத்தர்கள் செல்வி.எம்.வை.எவ்.நிஸ்ரத், செல்வி.ஈ.தர்சிகா ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர். .
Right to Education for Youth in Ampara District – (REYAD), த்திட்டமானது……
 மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், மனித ஆளுமை விருத்தி மற்றும் இறைமை உணர்வு என்பவற்றை மதித்து வலுப்படுத்தல். 
 அனைத்து தேசங்களிடையிலும் சுதேச, சாதி, தேசிய, சமய மொழி ரீதியான குழுக்களிடையில் புரிந்துணர்வு சகிப்புதன்மை, பால் சமத்துவம், நட்பு என்பவற்றை மேம்படுத்தல். 
 சட்ட ஆட்சிக்குட்பட்ட ஜனநாயக சமூகத்தில் சுதந்திரமாக ஈடுபட அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கல். 
 சமாதானத்தை கட்டியெழுப்புவதோடு அதனை பராமரித்தல்.
 மக்கள் மைய நிலைபேறு அபிவிருத்தி மற்றும் சமூக நீதியை மேம்படுத்தல். 
ஆகிய தலைப்புக்களில் உள்ளடக்கியுள்ளதாக மனித அபிவிருத்தி தாபனத்தின் பிரதி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் அவர்கள் தெரிவித்தார். 
மேலும் இவர் கூறுகையில் இத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைபடுத்த உள்ளதாகவும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்களிருந்து 1000 இளைஞர்களை உள்வாங்கவுள்ளதாக கூறினார்.