உதைபந்தாட்டப் போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா முதலிடம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகத்தின் 7வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.

சனி(20) ஞாயிறு(21) ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டியில் 36அணிகள் பங்குபற்றியிருந்தனர்..

போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகமும், காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகமும் தெரிவாகி முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் 1கோள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகமும், மூன்றாம் இடத்தினை விளாவெட்டுவான் ராஜா விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டனர்.

முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், சிறந்த பந்துக்காப்பாளர், சிறந்த விளையாட்டு வீரர் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன், வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.