2017 அரச இலக்கிய விருது

2017 அரச இலக்கிய விருதுக்காக கவனத்தில் கொள்ளவுள்ள தமிழ், சிங்கள, ஆங்கில நூல்கள் அடங்கிய பெயர் பட்டியலை நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்வரும் வியாழக்கிழமை வரை பரிசோதிக்க முடியும் என்று கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்திற்கான அரச ஆவணப் பதிவில், பதிவு செய்யப்பட்ட நூல்கள் இந்த பதிவு ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த பதிவு ஆவணத்தில் நூல் வெளியீட்டு நிறுவனம், அரச இலக்கிய ஆலோசகர் சபையினாலும் வழங்கப்பட்ட நூல்கள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த நூல்களின் பெயர்களை பரிசோதிக்க முடியும். அரச இலக்கிய ஆலோசகர் சபை, கலாசார அலுவல்கள் திணைக்களம், மற்றும் உள்நாட்டலவல்கள்,
வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் இணைந்து 2017 அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.