மண்ணுக்குள் வேர்கள், விண்ணோக்கும் கிளைகள்

மகுடம் ஐந்தாவது ஆண்டு மலர் பேராசிரியர் சி.மௌனகுரு இரட்டைச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு நேற்று(21) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதன் போது வெளியீட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மகுடம் மலர் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பேராசிரியர்கள், அரச உயரதிகாரிகள், விரிவுரையாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மலர் வெளியீட்டை தொடர்ந்து, நேற்று மாலை சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூட மாணவர்களின் மண்ணுக்குள் வேர்கள், விண்ணோக்கும் கிளைகள் விபரண அரங்க ஆற்றுகையும் நடைபெற்றது.