அரச அதிகாரிகளின் சட்டவிரோத செயற்ப்பாட்டுக்கு மக்கள் விசனம்

இன்றைய தினம் முல்லைதீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வசந்தபுரம் செல்கின்ற வீதியிலே இருக்கின்ற பேராறு ஆற்றினுள்  வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் சட்டவிரோதமான முறையிலே ஆற்றினில் JCP இயந்திரத்தின் மூலமாக பாரிய குழியொன்றை தோண்டி அங்கிருந்து தண்ணீரை எடுக்க முயற்சி செய்தவேளை பெரும் பதற்ற நிலமை உருவானது.

ஆற்றினுள் பாரிய குழியொன்றை தோண்டி பல லட்சம் பெறுமதியான மணல் இரண்டுபுறமும் குவிக்கப்பட்டிருந்தது இதேவேளை குறித்த பகுதியில் ஆறு பாய்கின்றவேளை செல்வதற்க்காக போடப்பட்டிருந்த மரங்கள் எல்லாம் JCB  மூலம் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆற்றினில் தமது வீட்டு தேவைக்காக மணல் ஏற்றிய போது கூட வனவள பாதுகாப்பு தினைக்களத்தினர் தங்களுடைய டக்ரர் இயந்திரத்தினை பறிமுதல் செய்து நீதிமன்றம் வரை எடுத்து சென்றனர். அவ்வாறு இருந்த வேளை இப்போது தமது தேவைக்காக ஆற்றிலே JCB இயந்திரத்தின் மூலமாக மணலை தோண்டி நீர் எடுக்க முயன்றது மட்டும் சரியா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வாதத்தில் ஈடுபட்ட நிலையில் மக்களால் ஊடகவியலாளர்களுக்கும் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதியில் இந்நிலைமை நீடிக்க சம்பவ இடத்துக்கு ஒட்டுசுட்டான் பொலிசார் வந்த  போது JCB இயந்திரம் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டிருந்ததால் பொலிசார் குறித்த இடத்தை பார்வையிட்டு குறித்த செயல் தவறானது எனவும் வனவள திணைக்களத்தின் செயற்ப்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதோடு மக்களை பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறும் குறித்த பகுதியிலிருந்து மணல் யாரும் ஏற்ற முடியாது எனவும் குறித்த திணைக்கள உயரதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விடயம் தொடர்பில் தெரிவித்து நாளை காலை வருகைதந்து இதனை பார்வையிட்டு பிரச்சனையை தீர்த்துவைக்க ஆவன செய்து  தருமாறு கோரினர் அத்தோடு மக்களை பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு செய்யுமாறும் தம் குறித்த பகுதியை மூடிவித்து தருவதாகவும் தெரிவித்தனர்

மக்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை எவ்வாறு ஆற்றில் JCB இயந்திரம் இறக்கி வேலை செய்வார்கள் இந்த மணல் நாங்கள் இங்கு வராவிட்டால்  JCB உரிமையாளர் மணல் யாட நடத்துபவர் அவர் எடுத்து சென்றிருப்பார் அனால் இது திட்டமிட்ட செயல் மக்கள் ஆற்றில் சவலால் மணல் ஏற்றின குற்றம் JCB வாகனம் மூலம் மண் அகழ்வு செய்தால் தவறில்லையா அரச திணைக்களம் சட்டவிரோத செயல் செய்யலாமா இதை யாரிடம் முறையிடுவது என கோரினர்