கிழக்கில் வானொலி வரலாற்றில் முக்கிய மைல் கல்லாம் ருத்ரம் எப்.எம் அங்குராப்பண நிகழ்வு

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை தமது தலைமைக் காரியாலயமாக கொண்டு நாடு முழுவதும் வானொலி வரலாற்றில் ஓர் முக்கிய மைல் கல்லாக விளங்கும் நோக்கில் ருத்ரம் எப்.எம்,( Ruthram fm ) அங்குராப்பண நிகழ்வு இன்று 21 திகதி திருகோணமலை நகரசபை  வளாகத்தில் அமைந்துள்ள கலையகத்தில் வானொலியின் பணிப்பாளர் ஆஷாத் காமில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சிறப்பு  விருந்தினர்களாக கிழக்கு மாகாண போக்குவரத்து துறை அமைச்சர் திருமதி. ஆரியகலப்பதி கலந்து கொண்டு ருத்ரம் எப்.எம் தை உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்துவைக்கபட்டது அத்துடன் சிறப்பு விருந்திராக
சட்டத்தரணி ஜெயஜோதி, நவரட்னம் மற்றும் வானொலியின் உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள்  அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.