கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி மாற்றிதர வேண்டும்

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி  மாற்றிதர வேண்டும் இதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர் முடியுமான பங்களிப்பை வழங்கியுதவ வேண்டும் என கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வி.கனகசிங்கம் கோரிக்கை விடுத்தார்..

நேற்றய தினம் திருகோணமலை வளாகத்தில் நான்குமாடி நுாலகக்க்கட்டித்தொகுதி புதிதாக திறந்துவைக்கப்பட்டது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உப தலைவர்பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரட்ண  மற்றும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் பொன்ற விருந்தினர்கள் கலந்து கொண்டு வைபவ ரிதியாக திறந்துவைத்தனர். இங்கு தலமையுரையாற்றிய வளாக முதல்வர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

திருகோணமலை பிராந்தியம் பண்பாட்டியல் பௌதிக சூழலைக்கொண்ட பிரதேசம் அதனால் 2006இல் கிழக்கு பல்கலைக்களக கவுன்சில் இங்கு சித்த வைத்தியப்பிரிவை ஏற்படுத்த  திர்மானித்தது.

2007 மற்றும் 2008ம்ஆண்டுகாலப்பகுதிகளில் பல்வேறுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான செயற்திட்டங்கள் பாடத்திட்டங்கள்  தயாரிக்கப்பட்டு அனுப்பட்டு அது நடமுறைக்கு வரவில்லை. தற்சமயம் அதற்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை  அபிவிருத்தி செய்துள்ளோம்

. இந்தியன் பல்கலைக்கழகதுறைசார் மதியுரைஞர்களின் ஆலோசனையைகளைப்பெற்று அதனை மீழமைத்துள்ளோம். எனவே இது பொருத்தமான காலம்  என நான் கருதகின்றேன். எமது வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்துவமான பீடமாக தரமுயர்த்தி  மாற்றியாக வேண்டியுள்ளது.

இதற்கு  இங்கு  பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பிரசன்னமாகியுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர் முடியுமான பங்களிப்பை வழங்கியுதவ வேண்டும்

2008 ஆண்டிலிருந்துகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் சித்த வைத்திய பிரிவு  ஒரு சிறு பிரிவாக இயங்கி வருகின்றது.

அதற்காக இந்தியன் அரசாங்கம் மில்லியன்கணக்கான பெறுமதியான  ஆய்வு உபகரணங்களை வழங்கியிருந்தது.இந்த உபகரணங்கள் நாட்டின் எங்கும் கிடைக்கப்பெறாதவையாகவும் எந்த உயர்கல்வி நிறுவனங்களிலும் காணப்படாதவையாகவுமுள்ளன.

இவ்வாறான பெறுமதிவாய்ந்த உபகரணங்கள் முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

எதிர்காலத்தில் பல ஆய்வுகளுக்கும் நாம் அதனைப்பயன்படுத்த முயற்சிகள மேற்கொண்டுள்ளோம்.

அவ்வாறான துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் நமது நாட்டிலும் மட்டுமன்றி உலகத்தின் பல பாகங்களில் உள்ளவர்களும் இங்கு வருகைதரலாம் அவ்வாறனவர் வந்து தங்கி நின்று ஆய்வுகளைசெய்யக்கூடிய வசதிகளும் இங்குள்ளன.

இந்நிலையில் எமது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி  மாற்றிதர வேண்டும். இதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவும் உபதலைவர் அவர்களும்  முடியுமான பங்களிப்பை வழங்கியுதவ வேண்டும் என கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வி.கனகசிங்கம் கோரிக்கை விடுத்தார்.