கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நுாலககட்டிடத்தொகுதி

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் 320 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நான்கு மாடிகளைக்கொண்ட நுாலககட்டிடத்தொகுதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர்  பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரட்ணவினால் வைபரீதியாக 19.05.2017 காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வளாக முதல்வர் கலாநிதி வி.கனகசிங்கம் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜயசிங்கமும் கலந்து கொண்டு சிறப்பித்தார்..

இங்கு நுாலகம்,தொல்பொருட்களின் கண்காட்சிக்கூடம்,என்பனவும் திறந்துவைக்கப்பட்டதுடன்.வளாகத்தின் இணைத்தளமும் ஆரம்பித்துவைக்கப்பட்டதாக வளாக முதல்வர் இங்கு குறிப்பிட்டார். இங்கு மானியங்கள் ஆணைக்குளுவின் உப தலைவர், பல்கலைக்கழக உப வேந்தர் ஆகியோர் உரையாற்றுவதனையும் ஏனைய நிகழ்வின் போது    எடுக்கப்பட்ட படங்களைக்காண்க