61 வருடங்களின்பின்னர் கந்தளாய் குளத்து மகா வேள்வி

திருகோணமலை கந்தளாய்( கண்தளை) குளத்து மகா வேள்விக்கு குழு மாடு பிடிக்க காட்டிற்க்கு புறப்பட்டுதல் பூஜை நேற்று நடைபெற்றது.குளக்கொட்டு மன்னன் காலத்து பாரம்பரிய மழைவேண்டி வேள்வி செய்யும் முறையானது 61 வருடங்களின்பின்னர் தம்பலகமம் ஆதிகோணநாதர் ஆலயம் மற்றும் விவசாய அமைப்புக்களால் இம்முறை செய்யப்படுகின்றது..

 7 வருடங்களுக்கொருமுறை மேற்கொள்ளப்படும் இவ்வேள்வியானது மிக நீண்டகாலமாக விடுபட்டு இருந்தது.    இதன் கால் நாட்டு வேள்வி பூஜை கடந்த 10.05.2017 அன்று ஆரம்பமானது. அன்றிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்வேளிவியில்  குளுமாடு பிடித்தல் மிகமுக்கியமான விடயமாகும் அந்தப்பூஜை நேற்று நடைபெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட படங்களைக்காண்க