*வீரத்தால் வீழ்த்தப்பட்ட இனமல்ல தமிழினம் மாறாக துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே வரலாறு.!*

உலகில் ஒருதமிழன் இருக்கும்வரை போராட்டம் தொடரும்!*
*மே18நினைவேந்தலில் த.தே.கூட்டமைப்பின் அம்பாறைமாவட்ட முக்கியஸ்தர் ஜெயசிறில்
உரை!*

*வீரத்தால் வீழ்த்தப்பட்ட இனமல்ல தமிழினம் மாறாக துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே
வரலாறு. தமிழன் என்ற ஒரேகாரணத்திற்காக இடம்பெற்ற மாபெரும் இனஅழிப்பே
முள்ளிவாய்க்கால் சம்பவமாகும். அங்குவிதைக்கப்பட்ட வித்துடல்களுக்கு எமது
அம்பாறை மாவட்டம் சார்பான ஆத்மாஞ்சலிகள்..
*இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்
கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  7வது வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில்
உரையாற்றுகையில கூறினார்.*
*இந்நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை மாலை காரைதீவிலுள்ள த.தே.கூட்டமைப்பின்
அம்பாறை மாவட்ட மாவட்ட பணிமனையில் உணர்வுபூர்வமாக் நடைபெற்றது. *

*அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்
தமிழினப்பற்றாளர்கள் காரைதீவுவாழ் உணர்வுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு
ஈகைச்சுடரேற்றியதுடன் 5நிமிடநேர ஆத்மார்த்த அஞ்சலி மற்றும் பிரார்த்தனை
இடம்பெற்றது.*

*அங்கு ஜெயசிறில் மேலும் பேசுகையில்:*
*தமிழர்கள் அன்று ஒற்றுமையாய் இருந்து சாதித்தவை ஏராளம். பிற்காலத்தில்
பிரிந்துநின்று அழிந்ததுதான்வரலாறு.*
*இன்றைய நாளை கடந்த 8வருடகாலமாக நான் இந்த காரைதீவு மண்ணில் எத்தனையோ
கெடுபிடிகளுக்குமத்தியில் செய்து வந்திருக்கின்றேன். *
*அன்றெல்லாம் ஒளிந்துகொண்டிருந்தவர்கள் இன்று அதே த.தே.கூட்டமைப்பின்சார்பாக
இறக்குமதிசெய்யப்பட்டவர்களைக்கொண்டு நினைவேந்தல் செய்யமுற்படுகிறார்கள்.*
*எனினும் எமது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எமது பாரம்பரியநிகழ்ச்சியில்
கலந்தகொண்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.*

*எனவே இன்னுமின்னும் ஒற்றுமையைச்சீர்குலைக்கும் செயற்பாட்டிற்கு தூபம்போடாமல்
ஒற்றுமையாய்இருந்தால் சாதிக்கலாம்.*
*இலங்கையில் தமிழன் வாழும்உரிமையைக்கேட்டதற்கு கிடைத்த சன்மானங்கள் அதிகம்.
அதன் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்கால் எனும் இனசுத்திகரிப்பு. *
*சர்வதேசம் என்றும் ஜ.நா.என்றும் கடந்த 8வருடகாலமாக பலரும் பேசுகின்றபோதும்
முள்ளிவாய்க்கால் அனர்த்தம் நிகழ்ந்து 8வருடம் கடந்துவிட்டபோதிலும் இன்னும்
நீதிகிடைக்கவில்லை.*
*கொத்துக்கொத்தாய் குண்டுகளைவீசி அழித்த அச்சம்பவத்திற்கு இன்னும்
நீதிநடைக்கவில்லை. *

*உரிமைக்காய்ப்போராடி அழிந்த சரித்திரம் இன்னுமில்லை. இந்த உலகில் ஒரு தமிழன்
இருக்கும்வரை போராட்டம் தொடரும்.*
*ஒருபுறம் ஆயுதப்போராட்டம் மௌனித்திருக்கலாம்.ஆனால் இராஜதந்திர நகர்வுகள்
அஹிம்சை வழிப்போராட்டம் தொடருவதை நாம் காணலாம்.*

*இம்முள்ளிவாய்காக்கால் நிகழ்வைக்கொண்டாடக்கூடாதென்று சிலர் இனவாத்தைக்
கக்குகின்றார்கள். எமதின உடன்பிறப்புகள் அழிந்ததை நினைவுகூருவதற்கு நாம்
யாரிடம் அனுமதி பெறவேண்டும்? நாம் ஆயுதம் தூக்கவில்லை. சமாதானவழியில்
செயற்படுகின்றோம்.*
*இழந்தவைகளை ஓரளாவது மீட்கலாம் உரிமைகளைப்பெறலாமென்று தற்காலிக
ஏறப்டாபாகஅரசாங்கத்துடன் ஓருவிதத்தில் இணைந்து செயற்பட்டுவருகின்றோம். அதனை
பலவீனமாகப்பார்க்கவேண்டாம். *

*உரிமைக்காகப்பேராடிய மக்களை கொன்றுகுவித்த வரலாறு இலங்கையில்தான்
நடந்தேறியிருக்கிறது.சர்வதேசத்தின் சதிவகை;குள் சிக்குண்டு தமது இன்னுயுpரை
மாய்த்த எமதின மக்களின் உடல்கள் புதைகுழியினுள் புதைக்கப்படவில்லை மாறாக
விதைக்கப்பட்டுள்ளன.*
*தமிழினவிடுதலைக்காக இன்னுயிரை ஈந்த லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் ஆத்மா
சாந்தியடையப்பிரார்த்திக்கின்றேன்.*
*இன்றைய நாளை எந்தவொரு தமிழனும் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டான்.எத்தனை
தலைமுறை சென்றாலும் மறக்கமுடியாது. என்றார்.*