இறந்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் உயிருடன் உள்ளவர்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறோம்

முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லது. ஆனால் அதே தினத்தில் உயிர் விட்டவர்கள் போக இந்த போரில் பிழைத்த
– பெற்றோரை இழந்த குழந்தைகள்
– பிள்ளைகளை காவு கொடுத்த பெற்றோர்
-கணவனை இழந்த மனைவிகள்
-உற்றார் பாதுகாவலர் இழந்த மக்கள்
-அங்கவீனமான மக்கள்

என பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர் இவர்களுக்கு நேற்றைய தினத்தில் என்ன கிடைத்தது எவராவது எதையாவது கொடுத்தார்களா ??

இறந்தவர்களை நினைவு கூரத்தான் வேண்டும் ஆனால் நாம் இறந்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் உயிருடன் உள்ளவர்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறோம்.

உயிர் இழந்தவர்களை பற்றி கவலைப்படும் அதேவேளை இவர்கள் ஏன் உயிர் இழந்தார்கள் என சிந்திக்கவும் வேண்டும்.

இதுவரை பிரிந்த ஒவ்வொரு உயிரின் எதிர்பார்ப்பும் நம் எதிர்கால சந்ததியினருக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே.

எனவே இறந்தவர்களை மட்டும் நினைவு கூறிக்கொண்டு ஆளாளுக்கு தங்கள் இருப்பை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்காமல் ஏன் அந்த ஆத்மாக்கள் இறந்ததோ அதற்கான பணியை செய்து முடிப்பதே அந்த ஆத்மாக்களுக்கு செய்யும் சரியான நினைவேந்தல் நிகழ்வு.

உரியவர்கள் வாழும்போது சரியான விடையத்தை செய்து கொடுத்தால் உயிர் போகப்போவதும் இல்லை நினைவேந்தலும் இல்லை.

நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் பேச்சுக்களையும் பார்க்கும் போது உங்கள் இருப்பையும் வாய்ப்பு வசதியையும் காப்பாற்றிக்கொள்ள இன்னுமொரு இவ்வாறான நிகழ்வுக்கு இட்டு செல்வீர்கள் போலத்தான் உள்ளது

தயவுசெய்து மாற்று கருத்து புதிய சிந்தனையாளர்களை இணைத்து கொள்ளுங்கள் அல்லது அவர்களுக்கு வழிவிடுங்கள் இல்லையேல் வாக்குகள் பிரிவதை யாராலும் தடுக்க முடியாது
அதே போல “சிறிய சிறுபான்மை விரைவில் பெரிய சிறுபான்மையாவதையும் தடுக்க முடியாது”

இறந்தவர்களை நினைவு கூறுங்கள் ஆனால் உயிரோடு உள்ளவர்களை எப்பவுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.