உலகில் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழ்இனஅழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும்.!

த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கோடீஸ்வரன் உருக்கமான உரை!
காரைதீவு   சகா
 
உலகின் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழினஒழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும். இதனை ஊழிஉள்ளகாலம்வரை எந்ததமிழனும் மறக்கமுடியாது.மறக்கவும்மாட்டான்..

 
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்கோடீஸ்வரன் காரைதீவில் கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த 7வது வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் உருக்கமாக கூறினார்.
இந்நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை காரைதீவிலுள்ள த.தே.கூட்டமைப்பின் மாவட்ட பணிமனையில் உணர்வுபூர்வமாக முக்கியஸ்தர் கிரு.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
 
தமிழினப்பற்றாளர்கள் காரைதீவுவாழ் உணர்வுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றியதுடன் 5நிமிடநேர ஆத்மார்த்த அஞ்சலி மற்றும் பிரார்த்தனை இடம்பெற்றது.
அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் பேசுகையில்:
 
உரிமைக்காகப்பேராடிய மக்களை கொன்றுகுவித்த வரலாறு இலங்கையில்தான் நடந்தேறியிருக்கிறது.சர்வதேசத்தின் சதிவலைக்குள் சிக்குண்டு தமது இன்னுயயிரை மாய்த்த எமதின மக்களின் உடல்கள் புதைகுழியினுள் புதைக்கப்படவில்லை மாறாக விதைக்கப்பட்டுள்ளன.
தமிழினவிடுதலைக்காக இன்னுயிரை ஈந்த லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கின்றேன்.
 
இன்றைய நாளை எந்தவொரு தமிழனும் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டான்.எத்தனை தலைமுறை சென்றாலும் மறக்கமுடியாது. என்றார்.