சித்தாண்டி, உதயமூலை தீர்த்தக்கரையின் முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

மட்டக்களப்பு – சித்தாண்டி, உதயமூலை தீர்த்தக்கரையின் முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உரையும் நிகழ்த்தியுள்ளனர்.

மேலும், சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்தை சுத்தம் செய்ததுடன், உயிரிழந்தவர்களின் நினைவாக மரம் ஒன்றையும் மக்கள் நாட்டி வைத்துள்ளனர்.

சித்தாண்டியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சிறுவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.