முப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முப்படையே வெளியேறு என மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் காலம், வெகு தொலைவில் இல்லை என தான் நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..

ஒவ்வொரு வருடமும், மே மாதம் 18 நினைவேந்தல் நாளில் தமிழ் சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலையின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாணத்தில் ஒன்றரைஇலட்சம் படையினர் குவிக்கபட்டதற்கான காரணத்தை இனியாவது கூறவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையிலும் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை எனவம் வடமாகாண சபை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.