முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சம்பந்தன் சந்திப்பு

முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா. சம்பந்தன் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 71 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது