பாடுமீன் சமர்” கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில்

க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு நகரின் “பாடுமீன் சமர்” என வர்ணிக்கப்படும் பெயர்பெற்ற இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான Big match (விக்மட்ச்)நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியிணருக்கும்,புனித மிக்கல்கல்லூரியின் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட்சமர் இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நிகழ்வுகளாக நடைபெறவுள்ளது..

 நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது புனிதமிக்கல் கல்லூரியின் முதல்வர் ஆர்.வெஸ்லியோ வாஸ் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் காலை 8.00மணியளவில்  நடைபெறவுள்ளது.முதல்நாள்  சனிக்கிழமை(20.5.2017)  நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வீ.தவராசா அவர்களும், கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் எந்திரி பீ.ரஞ்சன் அவர்களும்,விஷேட அதிதிகளாக மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தலைவரும்,தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபையின் முகாமையாளருமான எந்திரி டீ.ஏ.பிரகாஸ்,புனித மிக்கல் கல்லூரியின் அபிவிருத்தி சங்க செயலாளர் அழகையா ஜெயநாதன் ஆகியோர்கள் முதல்நாள் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இரண்டாம் நிகழ்வில் (21.5.2017) பிரதம அதிதியாக மட்டக்களப்பு  வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும்,கௌரவ அதிதியாக மட்டக்களப்பு  தேசிய அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் எம்.ஆர்.ஹேமந்தர,வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்விபணிப்பாளர் வீ.லவக்குமார்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்பீ.விமல்ராஜ் ஆகியோர்களும்,விஷேட அதிதிகளாக அருட்தந்தை போல் சற்குணநாயகம்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவசங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.அணிக்கு பதினொருபேர் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஒருநாள் தொடரில் தொண்ணூறு ஓவர் வீசப்படவுள்ளது.