சின்மியா மிசன் திருகோணமலை கிளையின் நிகழ்கவுள்

இலங்கை சின்மியா மிசன் திருகோணமலை கிளையின் ஆன்மீக செயற்பாடுகள் அனைவரையும் கவரும் விதத்தில் புதிய பதையில் சென்று கொண்டிருக்கிறது..

இதன் இளம் துறவு தலமையான  ”பிரம்மச்சாரிணி மஹிமா சைத்தன்யா” அவர்களின்  முயற்சியால் ஆன்மீக வளிகாட்டல் செயற்பாடுகளில் முதியோர்களுடன்  இளையோரும் ஈடுபடும் தன்மையை அவதானிக்க முடிகிறது.

இதனடிப்படையில் கடந்த 13,14ம்திகதி களில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக்கல்லுாரி மண்டபத்தில் பல ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன. 13.05.2017 மாலை 5.00 மணியளவில்  ”பிரம்மச்சாரிணி மஹிமா சைத்தன்யா அவர்களின் ”மனமுகாமைத்துவம்” பற்றிய சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.இங்கு பல முதியோர், இளையோர் என அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறே 14.05.2017 அன்று மாலை  தேடல் எனும் திரைப்படம் திரையிடப்பட்டது. அது சுவாமி சின்மியானந்தரது வாழ்கை வரலாற்றை விளக்கும் வகையிலாக அமைந்திருந்தது. இந்நடவடிக்கை மிகவும் எழிதாக சுவாமியின் வரலாற்றை தெளிவாக விளக்கியது. அத்துடன்   வாழ்வியல் போலித்தனத்தில் பற்று பாசம் வைப்பதனை விடுத்து, இறைவனில் பற்றுவை என் ற அவரது  கருத்தை எழிதாக  விளக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிகழ்வு மாலை 5.00 மணியிலிருந்து சுமார் 8.00 மணிவரை நடைபெற்றது. இங்கு இளம் தொண்டர்கள் சின்மியமிசன் கருத்தக்களை விதைக்கும் அரிய நுால்களை விநியோகிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

முதலில் சுவாமியின் உருவப்படத்திற்கு  தீபம் ஏற்றி வழிபாடு இயற்றி இந்நிகழ்வுகள் ”பிரம்மச்சாரிணி மஹிமா சைத்தன்யா” அவர்களின்   தலமையில் நடைபெற்றது. இது போன்ற பல நடவடிக்கைளில்,  பயிற்சிகள், ஆன்மீக உரைகள்,அறநெறிப்பாடசாலை முயற்சிகளில் திருகோணமலைகிளை ஈடுபடுவது முன்னோடித்தனமாகவுள்ளன.குறிப்பாக இளைஞர்களாலும்  மக்களுக்குத்தேவையான ஆன்மீகம் செய்ய முடியும் என்ற புரட்சியை இவர்களது நடவடிக்கை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.