முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை

கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது.

அந்தவகையில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத வழிபாட்டு நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறப்புற நடைபெற்றது

இதில் இந்து இஸ்லாம் கிறிஸ்தவ பௌத்த மதகுருமார்கள் பங்குபற்றி இந்த சர்வமத வழிபாட்டை நிகழ்த்தினர்