சிங்கத்தை அடக்கிய தங்கத் தமிழன் மனோ!

கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சிங்கள நாடு, சிங்களவனே
அமைச்சு என
சீறிப் பாய்ந்த சிங்களத்தை,
சிறிலங்காவில் வாழும் 
சிங்களவனும்
இந்தியாவிலிருந்துதான்
இங்கு வந்தான் என
பதிலடி கொடுத்து அவர் வந்த
பாதையாலேயே திரும்பச்
செய்த மனோவே
உனக்கு எப்படி ஐயா
வந்தது இந்த திடம்?

நெஞ்சை நிறுத்தி
நேருக்கு நேர் வாதம் புரிந்து
தமிழ், முஸ்லிம்களின்
தாய் நாடும் இலங்கை என
அஞ்சாத தொனியில்
ஆர்ப்பரித்து சிங்க(ள)த்தையே
திக்கு முக்காட வைத்த
தங்கத் தமிழன் ஐயா மனோ நீ!.

தொடை நடுங்கி, தொப்பிளுக்கு கீழ்
ஏதோ வழிய (சிறுநீர்) “கடை போய்”
காலில் வீழ்வோரை நாளெல்லாம்
காணும் நான்
மனோ உன் துணிச்சல் கண்டு
மற்றவர்களுக்கு ஏன் இது
இல்லை என சிந்திக்கிறேன்!

நேருக்கு நேராக நிமிர்ந்து நின்று
கையை இடுப்பில் கனமாக குத்தி
சொற் போர் புரியும் துணிச்சலை உனக்கு
சொல்லித் தந்தது யாரையா?

நான் ஓர் அமைச்சராக இருந்து
ஞானசார என்னைச் சந்திருந்தால்
குலை நடுங்கிப் போய் பயத்தில்
குதிகாலே நடனம் ஆட
மறு கையால் என் போனிலிருந்து
மறைமுகமாக ஓர் எஸ்.எம்.எஸ்
அனுப்பியிருப்பேன்.

எப்படி எனத் தெரியுமா?

ஞானசாரே
நான் எப்போதும்
உங்கள் பக்கம்தான்…
மக்களிடம் நான் நடிக்கிறனே தவிர.
மற்றப்படி எல்லாம்
உங்கள் பக்கமே நான்!
புத்தம் சரணம் கச்சாமி
GO AHEAD.. ALL THE BEST
என்றே SMS அனுப்பியிருப்பேன்

ஏனெனில்…..
நான் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி!
நீ ஒரு தமிழ் அரசியல் ஞானி!!
நடிப்பது எனது தொழில்
சமூகத்துக்காக துடிப்பது உனது வழி
இவையே எமது வித்தியாசம்

– கவிஞர் ஏ.எச். சித்தீக் காரியப்பர்

நன்றி கவிஞர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் FB