காத்தான்குடியில் அமைச்சர் றஊப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் பெருவிழாக்கள்

(ஆதிப் அஹமட்)


நகர திட்டமிடல் நீர்வழங்கல்  அமைச்சர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் றஊப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான ULMN.முபீனின் வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சர்  றஊப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் அபிவிருத்திப் பெருவிழாக்கள் பின்வரும் விபரப்படி 20.05.2017 மற்றும் 21.05.2017 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளன..

20.05.2017 சனிக்கிழமை
காலை 9.00 மணி : ஜாமிஅத்துல் பலாஹ் அறபுக் கலாசாலைக்கான கணினித் தொகுதிகளை கையளித்தல்.
காலை 10.00 மணி : ரூபா முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட காங்கேயனோடை ஆற்றங்கரைப் பூங்காவை திறந்து வைத்தல்.

காலை 11.00 மணி : ரூபா முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ஆரையம்பதி செல்வாநகர்-கிழக்கு கடற்கரை பூங்காவை திறந்து வைத்தல்.
மதியம் 12.00 மணி : ரூபா முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாலமுனை நடுத்துறை கடற்கரை சிறுவர் பூங்காவை திறந்து வைத்தல்.

பிற்பகல் 12.30 மணி : ரூபா இருபத்தி இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாலமுனை நடுவோடை கடற்கரை கொங்கிறீட் வீதி,வாகன தரிப்பிடம், சிறுவர் விளையாட்டுப் பகுதிகளை திறந்து வைத்தல்.

21.05.2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி : ரூபா இருபத்தி இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள காத்தான்குடி பிரதான வீதி பொது மலகூடத்திற்கான அடிக்கல் நடல்.

காலை 11.00 மணி : ரூபா ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விக்டரி விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கை திறந்து வைத்தல்.

பிற்பகல் 3.30 மணி : ரூபா ஒருகோடி நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி ஆற்றங்கரை சிறுவர் பூங்காவை திறந்து வைத்தல்.

பிற்பகல் 5.30 மணி : ரூபா ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நூறாணிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயல் மையவாடி சுற்றுமதிலை திறந்து வைத்தல்.

மாலை 7.00 மணி : நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சு,மாநகர அபிவிருத்தி மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுகளின் ரூபா இரண்டு கோடி நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கபட்ட காத்தான்குடி கடற்கரைப் பூங்கா,சிறுவர் பூங்காக்கள்,சூரிய சக்தி மின்விளக்குகள் ,கடற்கரை வீதியோர நீண்ட வாகன தரிப்பிடம், உடற்பயிற்சி நடைபாதை உள்ளிட்டவைகளை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தலும் மாபெரும் பொதுக்கூட்டமும்

நகர திட்டமிடல்  நீர்வழங்கல் கொளரவ அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் றஊப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ULMN.முபீன் அவர்களின் தலைமையில் நடைபெறும் மேற்படி நிகழவுகளில் பிரதம அதிதியாக கௌரவ நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான றஊப் ஹக்கீம்,கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹாபிழ் Z.A. நஸீர் அஹமட் Eng,மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஷ்ஷெய்யித் அலி ஸாஹிர் மௌலானா,கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்Eng,காத்தான்குடி முன்னாள் நகர பிதா மர்சூக் அஹமட் லெப்பை மற்றும் கண்ணியத்திற்குரிய உலமாக்கள்,பிரமுககர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் அன்புப் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

குறிப்பு இறுதி நிகழ்வான காத்தான்குடி கடற்கரை பூங்கா திறப்பு விழாவின் பின் 21-05-2017 (ஞாயிற்றுக்கிழமை)
மாலை 7.30 மணிக்கு கடற்கரை அன்வர் பள்ளி அருகாமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
என்பதையும் அறியத்தருகின்றோம்.

அன்புடன்
மத்திய குழு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்-காத்தான்குடி