சித்தாண்டியில் 70 வயது முதியவர் வாகன விபத்தில் படுகாயம்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் இன்று (17) புதன்கிழமை காலை  இடம்பெற்ற வாகன விபத்தில் சித்தாண்டி -4, உதயன்மூலையைச் சேர்ந்த காத்தமுத்து தங்கராசா (வயது 70) என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்..

விபத்துக்குள்ளான முதியவரை உடனடியாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான முதியவர்  தனது முதியோர் கொடுப்பனவைப் பெறுவதற்காக    சித்தாண்டி உப தபாலகத்திற்கு  முச்சந்திப் பிள்ளையார் முன்னாள் உள்ள மஞ்சள் கடவையூடாக தனது சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தவேளையில் அதிவேகமாக வந்த சுங்காவில் இருந்து அக்கரைப்பற்று சென்ற தனியார் வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தை ஏற்படுத்திய பேரூந்தை சித்தாண்டி பிரதேச பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த தனியார் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் வேறு பேரூந்தில் சென்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இடத்திற்கு ஏறாவூர் போக்குவரத்துப் பொலிசார் வருகைதந்து மேலதிக தகவல்களை பதிவு செய்தனர்.