முல்லைத்தீவு – கொக்குளாய் கடலில் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி தென்னிலங்கை மீனவர்கள் இன்று மீன்பிடியில்

முல்லைத்தீவு – கொக்குளாய்   கடலில்   நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி தென்னிலங்கை மீனவர்கள் இன்று மீன்பிடியில் ஈடுபட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்..

தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறும் செயற்பாட்டை நேரடியாக அவதானிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட   கடற்தொழில்  நீரியல்வளத்துறை அதிகாரிகள்  கொக்குளாய் கடற்கரைக்கு  தற்சமயம் விஜயம்செய்துள்ளனர்.

உழவு இயந்திரம் மூலம் வலையினை இழுத்து தொழில் செய்யும் முறை தடை செய்யப்பட்ட தொழிலாக இருகின்ற போதிலும், இன்று காலை உழவு இயந்திரங்களை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள்  கொக்குளாய்   கடலில்   கடற்தொழிலில் ஈடுபட்டனர்.