மாத்தளன் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற மாத்தளன் பகுதியில் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

யுத்தகாலத்துக்கு முன்னர் நல்ல நீராக இருந்த கிணறுகளும் தற்போது உப்புநீராக மாறியுள்ளதாகவும் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு உள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள் மாலை வேளையில் இலங்கை இராணுவத்தினர் வவுசர் மூலம் கொண்டுவந்து தரும் நீர் போதியதாக இல்லை எனவும் தமக்கு குடிநீர் வசதியை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் .