பட்­ட­தா­ரி­களை வேலை­வாய்ப்­புக்குள் உள்­வாங்­குதல் : விஷேட அமைச்­ச­ரவைக் கூட்டம்

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பட்­ட­தா­ரி­களை வேலை­வாய்ப்­புக்குள் உள்­வாங்­கு­வ­தற்­கான மாகாண அமைச்­ச­ர­வையின் விஷேட கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்­பெ­று­மென்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் செய்­னு­லாப்தீன் நஸீர் அஹமட் தெரி­வித்தார்..

 

 

பட்­ட­தா­ரி­களின் நிய­மனம் தொடர்­பாகக் கேட்­ட­போது அவர் இந்தக் கருத்தைத் தெரி­வித்தார்.

இது விட­ய­மாக தொடர்ந்து கூறிய அவர்,

முதலில் மாகா­ணத்தில் எங்­கெங்கு, என்­னென்ன பாடங்­க­ளுக்­காக ஆசி­ரி­யர்கள் நிய­மனம் செய்­யப்­பட வேண்டும் என்ற விவ­ரங்­களைப் பெறும் வேலைகள் அடுத்த ஓரிரு நாட்­களில் ஆரம்­பித்து விடும். அதற்­கான பணிப்­பு­ரைகள் ஏற்­கெ­னவே உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு விட்­டன. 17ஆம் திகதி இடம்­பெ­று­கின்ற மாகாண அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் பின்னர் அடுத்து வரும் ஓரிரு வாரங்­க­ளுக்குள் பட்­ட­தா­ரி­களை வேலை­வாய்ப்­புக்குள் உள்­ளீர்ப்­ப­தற்­கான விண்­ணப்­பங்கள் மாகாண சபையால் கோரப்­படும்.

இதன்­படி உட­ன­டி­யாக ஆயிரம் பட்­ட­தா­ரி­களும் அதன் பின்னர் கட்­டம் ­கட்­ட­மாக தொடர்ச்­சி­யாக ஏனை­யோ­ருக்கும் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. வேலை­வாய்ப்­பின்றி தொழி­லுக்­காக போராடும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு அநீ­திகள் ஏற்­ப­டாமல் தடுப்­ப­தற்­காக, தற்­போது வேறு அரச தொழில்­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்கும் பட்­ட­தா­ரிகள் தற்­போது மாகாண சபையால் கோரப்­ப­ட­வுள்ள விண்­ணப்­பங்­களின் போது அதற்கு விண்­ணப்­பிப்­பதி­லி­ருந்து தவிர்த்துக் கொள்­ளு­மாறு கிழக்கு முத­ல­மைச்சர் கேட்டுக் கொண்டார்.

மாகாண அமைச்­ச­ர­வை­யிலே எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்­தப்­படும் வகையில் அறு­தி­யா­கவும், உறு­தி­யா­கவும் இருக்கும். கிழக்கு மாகா­ணத்தின் பாட­சா­லை­க­ளி­லுள்ள 4784 ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான அனு­ம­தியை தேசிய முகா­மைத்­துவ திணைக்­களம் கடந்த வாரம் கிழக்கு மாகாண சபைக்கு வழங்­கி­யி­ருந்­தது. அந்த அனு­ம­தியின் பிர­கா­ரமே உட­ன­டி­யாக 1000 பேரும் பின்னர் கட்­டம் ­கட்­ட­மாக ஏனைய அனு­மதி வழங்­கப்­பட்ட 3784 பேரும் நிய­மனம் செய்­யப்­ப­ட­வுள்­ளார்கள்.  இதன் மூலம் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் முழு­மை­யாக நிரப்­பப்­ப­டு­வ­தோடு ஆசி­ரியர் பற்றாக்குறையும் முழு­மை­யாக நீங்கி விடும்.

“வேலை­வாய்ப்­பற்­றி­ருக்கும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” எனும் எனது நீண்ட நாள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதுடன் இதன் மூலம் மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்

குறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் படவுள்ளது. தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.