முன் கூட்டியே மாகாண சபைகளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிகாரம் தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டால் முன் கூட்டியே மாகாண சபைகளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆளும் கட்சி அதிகாரத்திற்கு சவால் விடுக்கப்பட்டால் பதவிக் காலம் நிறைவடைய முன்னதாகவே மாகாண சபைகள் கலைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது..

வடமத்திய மாகாண சபையின் 18 உறுப்பினர்கள் முதலமைச்சர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு கோரி சத்திய கடதாசி ஒன்றை மாகாண ஆளுனரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளிலும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஆளும் கட்சி சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவ்வாறான ஓர் நெருக்கடி நிலைமை ஏற்பட்டால் மாகாணசபைகளை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பரிந்துரை செய்ய தீர்மானித்துள்ளனர்.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் செப்டம்பர் மாதமும், மத்திய மாகாணத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டிலும் பூர்த்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது