மாவடிமுன்மாரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் படுகாயம்.

மட்டக்களப்பு,  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்தான சம்பவம் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாந்தாமலை பகுதியில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிளும், கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுக வருகின்றனர்.