மோடியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கைகள்

பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி எழுத்துமூலமாக முன்வைத்த சமூக, பொருளாதார, கலாச்சார கோரிக்கைகள்

1) லயன்கள் ஒழிக்கப்பட்டு தனி வீடமைப்பு திட்டத்துக்கான மேலதிக ஒதுக்கீடு
2) மலையக பாடசாலைகளுக்கு தேவையான விஞ்ஞானம், கணித பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க தமிழ் மொழியிலான பயிற்சி கலாசாலையும், அதற்கான இந்திய பயிற்சியாளர்களும்
3) மலையக பாடசாலைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு உதவிகள்
4) தமிழ் மொழியிலான நவீன தொழில் பயிற்சி கலாசாலை.
5) மலையக பல்கலைக்கழகம் – பிரபல இந்திய பலகலைக்கழகம் ஒன்றின் இணைவுடன் முதற்கட்ட பீடங்களை அமைத்து ஆரம்பிக்க வேண்டும்.
6) பல்கலைக்கழக தகைமை பெற்ற மலையக மாணவர்களுக்காக முழுமையான புலமைபரிசிலுடன் கூடிய இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வி வாய்ப்பு
7) கடந்த ஆட்சியில் 2013ம் வருடம் கையெழுத்து இடப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்திய அரசிற்கும், இலங்கை அரசின் மொழித்துறை அமைச்சுக்கும் இடையிலான மொழிகொள்கை அமுலாக்கல் தொடர்பான ஒத்தாசைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்  போன்ற  கோரிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டனி  எழுத்து மூலமாக கையளித்துள்ளது.