மட்டக்களப்பும் மீன்சொதியும்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டு-அம்பாறை இல் பிறந்து வளர்ந்து ஏதோ காரணங்களுக்காக நாட்டின் உள்ளோ வெளியிலோ புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரவர் அம்மாக்களின்  கைப்பக்குவத்தில் இழந்து போன மீன் சொதியின் அருமை .
“இவ்வளவு நாளும் சட்டில சோதி  வைச்சன் நீ வந்தா வாளிலதான் சோதி  வைக்கவேணும் ” இது எப்போதாவது

இருந்துவிட்டு வீட்டிற்கு போய் வந்த காலத்தில் அம்மா சொல்கின்ற பட்ஜெட் வாக்குமூலம் ..

எல்லோர் வீட்டிலுமே சைவம், அசைவம் இரண்டு சொதிகளிலுமே சூப்பர் டூப்பர் ரெசிபிகள் இருக்கும் . மீன் சொதி அது தனி வகையறா மணலை மீன் சொதி கொஞ்சம் எலுமிச்சை சாறு தூக்கலாய் விட்டு வைப்பது ஒரு ரகம் . எங்கள் ஊர்ப்பக்கம் செல்வன் மீனில் குழம்பு , சொதி , பொரியல் , மீன்  போட்டு முருங்கை இலை சுண்டல் என்று களை கட்டும் .

கோவில் திருவிழாக்களோ , அம்மன் கோவில் கதவு திறந்தாலோ உள்ளீடுகள் மாறுமே தவிர சொதி இல்லாமல் சோறு இறங்காது . அந்த நாட்களில் மட்டும் முருங்கை  இலை , கானந்தி ,அகத்தி , பருப்பு என அணிவகிர்த்து நிற்கும் சைவ சொதி மெனு .
வன்னியில்  இருந்த நாட்களில் அக்கரைப்பற்றை

பூர்வீகமாக கொண்ட வசந்தி ஆன்டி வீட்டில் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் போய் மீன் சொதி வாங்கி தொண்டையில் ஊற்றிக்கொண்டு ஜென்ம சாபல்யம் அடைந்ததும் உண்டு.

https://whitephosparus.wordpress.com/2017/05/10/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a/