விருந்துபசாரத்தில் விக்னேஸ்வரன், சம்பந்தனை மோடி கூட்டாகச் சந்தித்தார்?

கொழும்புக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இரவு விருந்துபசாரம் ஒன்றும் நடைபெற்றது.

பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் விருந்துபசாரத்தில் பங்குபற்றியதாக மூத்த அமைச்சர் ஒருவர் தகவல் தந்தார்.

நரேந்திரமோடியுடன் விக்னேஸ்வரன் தனியாக உரையாடினார் என்றும் சம்பந்தன் அதற்கு அடுத்த ஆசனத்தில் இருந்து அவதானித்தார் எனவும் மற்றுமொரு தகவல்.

ஆனால் இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. எனினும் அந்த உரையாடலை அமைச்சர் மங்கள சமரவீர இடையிடையே குறுக்கீடு செய்து குழப்பினார் எனவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் விருந்துபசாரத்தில் உரையாடப்பட்ட விடயங்கள் எல்லாமே நகைச்சுவையாகவே இருந்திருக்கும். விருந்துபசாரம்தானே எதையும் எப்படியும் பேசிவிட்டுப் போகலாம்.

அதிகாரபூர்வமாக நடத்தப்படும் பேச்சுக்களில் எடுக்கப்படும் முடிவுகளை அல்லது உறுதிமொழிகளைக் கூட பின்னர் கைவிடுகின்ற இந்த மூத்த அரசியல் தலைவர்கள் விருந்துபசாரத்தில், ஹாய் சொல்லி மது அருந்திவிட்டு பேசுகின்ற விடயங்களை சீரியசாக எடுப்பார்கள் என்பது எம்மாத்திரம்?

இது தெரிந்துதான் சம்பந்தன் ஒதுங்கியிருந்தாரோ? அல்லது விக்னேஸ்வரனோட சேர்ந்து நான் என்னத்தப் பேசுறது என்று நினைத்து???

அதேவேளை அந்த விருந்துபசாரத்தின் ஒருகட்டத்தில் விக்னேஸ்வரன் சம்பந்தன் ஆகியோரை மோடி கூட்டாகச் சந்தித்தார் என்றும் ஒரு தகவல்???

எப்படியோ மோடியின் வருகையால் எதுவும் மாறிவிடாது. நேரு காலத்தில் இருந்து நம்பிக்கை வைத்த இந்தியப் பிரதமர்கள் என்ன செய்தார் என்ற கேள்விகளுக்கு இன்னமும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆகவே மோடியால் என்ன செய்ய முடியும்? அவர் பாவம்-

நன்றி  Amirthanayagam Nixon முகப்புத்தகத்திலிருந்து