முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கு

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட  (மாஞ்சோலை) வைத்தியசாலைக்கு  3.30 மணியளவில் அவசர அவசரமாக தலையில்  அடிபட்டு இரத்தம் வடியும் ஒரு குழந்தையை கொண்டு வந்திருந்தார்கள் . அங்கே அந்த நேரத்தில் கடமையில் எந்த வைத்தியரும் இருக்கவில்லை. இன்றைய நாளில் கடமையாற்ற வேண்டிய வைத்தியருக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்ட போது வருகிறேன் என பதிலளித்துவிட்டிருந்தாலும் உடனடியாக வைத்தியர் பணிக்கு சமூகமளிக்கவில்லை.
மேலும் மூன்று தடவைகள் வெளி நோயாளர் பிரிவினரால் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது சுமார் 1 மணித்தியாலம் கடந்த நிலையில் தான் வைத்தியர் வருகை தந்திருந்தார். கடவுள் போல் பார்க்கும் வைத்தியர்கள் இவ்வாறு இருக்கும் போது உயிர்கள் பெறுமதி இழந்து போகிறது.
குறிப்பாக இங்கு கடமையாற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் கடமை  நேரத்தில் தங்களுடைய பணியை செய்யாமல் அடிக்கடி ஓய்வெடுக்க செல்கின்றமை வழக்கமாக நடக்கின்ற ஒரு விடயமாக போய்விட்டது என மக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர். ஆகவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் .