மட்டு மாவட்டத்தில் டெங்கினால் 12வயது சிறுமி உயிரிழப்பு

டெங்குக் காய்ச்சல் காரணமாக காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா சஹா (வயது 12) என்ற சிறுமி, புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  பணிப்பாளர், டொக்டர் எம்.எஜ்.இப்றnலெப்பை தெரிவித்தார்.

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி, உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 

அங்கு கடந்த 21 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த  நிலையிலேயே இச்சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த வருடத்தின இதுவரையான காலப்பகுதியில்  மட்டக்களப்பில் டெங்குக் காய்ச்சலினால்  6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.