மக்களின் காணிகளை தந்தால் மே 18 இல் அரிசி பொதியுடன் வரத்தேவையில்லை

சண்முகம் தவசீலன்

மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் திகதி, நினைவேந்தல் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளமைக்கு மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வறுமை ஒழிப்பு நிகழ்விற்காக முல்லைத்தீவு மாட்டத்திற்கு செல்லும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, மே 18 நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்காகவே செல்வதாக மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் காணிகளை கையகபப்டுத்தியிருந்தால் முல்லைத்தீவு மாவட்டம் எவ்வாறு வறுமையிலிருந்து மீளுவது என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுயள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கொண்டுவரும் பொதி அரிசியுடன் தமது வறுமை முடிவடைந்துவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள், தமது அனைத்து வளங்களையும் இராணுவம் மக்களிடம் கையளிக்க எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.