வெல்லாவெளி விளையாட்டு மைதானங்கள் ஜனாவின் நிதிப்பங்களிப்புடன் மீள்புனரமைப்பு.

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின்  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள தூர்ந்து போன நிலையில் காணப்படும் விளையாட்டு மைதானங்களை  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்கள் பார்வையிட்டு தனது நிதியைப் பயன்படுத்தி அதனை மீள்புனரமைப்பு செய்து வருகின்றார்.இப்புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த 08.05.2017ம் திகதியில் இருந்து தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டம், 40ம் கிராமம், வெல்லாவெளி விவேகானந்தபுரம், 35ம் கிராமம், பலாச்சோலை, பழுகாமம்,வேற்றுச்சேனை போன்ற கிராமங்களின் மைதானங்களை அக்கிராமத்தில் உள்ள விளையாட்டக்கழகங்களின் கோரிக்கைக்கு இணங்க புனரமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.விளையாட முடியாத நிலையில் பற்றைக்காடுகளாகவும்,விஷஜந்துக்களின் இருப்பிடமாகவும் காணப்படும் மேற்படி விளையாட்டு மைதானங்களை பார்வையிட்டு கனரக வாகனத்தை பயன்படுத்தி விளையாட்டு வீரர்கள் விளையாடுமளவுக்கு திருத்தி கொடுத்துள்ளார்..