வடக்கு – கிழக்கில் 6000 பொருத்து வீடு – அனு­மதி வழங்­கி­யது அமைச்­ச­ரவை

வடக்கு – கிழக்­கில் முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட – பொருத்து வீட்டை அமைப்­ப­தற்கு நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தலா 15 லட்­சம் ரூபா செல­வில் 6 ஆயி­ரம் வீடு­கள் இதற்கு அமை­வாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளன..
முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்­கில் அமைப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண சபை­யும் இதற்கு எதி­ராக தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யிருந்­தது. இவற்­றைப் புற­மொ­துக்கி, முன் நிர்­மா­ணிக்­கப் பட்ட வீடு­களை அமைப்­ப­தற்­குக் கொழும்பு அர­சின் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க் கி­ழமை அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நடை­பெற்­றது.

இதில், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் இடம்­பெ­யர்ந்த குடும்­பங்­க­ளுக்­காக வீடு­க­ளைப் பெற்­றுக் கொடுக்­கும் நோக்­கில் செயற்­ப­டுத்­து­வ­தற்­குப் பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை மீண்­டும் மதிப்­பீடு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட சிறப்பு வேலைத்­திட்ட அமைச்­சர் கலா­நிதி சரத் அமு­னு­கம தலை­மை­யி­லான குழு­வின் முடி­வு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, ஒரு வீட்­டுக்கு 1.5 மில்­லி­யன் ரூபா எனும் அடிப்­ப­டை­யில் 6 ஆயி­ரம் வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­குப் பொரு­ளா­தார முகா­மைத்­து­வம் தொடர்­பான அமைச்­ச­ர­வைச் செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.
இதன் அடிப்­ப­டை­யில் 6 ஆயி­ரம் முன் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை அமைப்­பது தொடர்­பில் சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு, மறு­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்­றம் மற்­றும் இந்து மத அலு­வல்­கள் அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­த­னி­னால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ர­வை­யில் அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
போரி­னால் இடம்­பெ­யர்ந்த குடும்­பங்­க­ளுக்­கா­கச் சிமெந்­துக் கற்­கள் பாவித்து நிர்­மா­ணிப்­ப­தற்­குப் பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள 59 ஆயி­ரம் வீடு­கள் அமைப்­ப­தைச் செயற்­ப­டுத்­தும் முறை தொடர்­பில் பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்கு உயர் அதி­கா­ரி­கள் கொண்ட குழுவை நிய­மிப்­ப­தற்­கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
வடக்­கு-­­கி­ழக்­கில் 60 ஆயி­ரம் முன் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. ஒரு வீடு 21 லட்­சத்­தில் (2.1 மில்­லி­யன்) அமைக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணத்­தில் இரண்டு வீடு­கள் முன்­னோ­டி­யாக அமைக்­கப்­பட்­டன. இதற்­குக் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. தற்­போது 6 ஆயி­ரம் வீடு­களை, தலா 15 லட்­சம் ரூபா­வில் (1.5 மில்­லி­யன்) அமைக்க அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.