மட்டக்களப்பு, வவுனியா சிறைகளில் இருந்து 20பேர் விடுதலை

வவுனியா சிறைச்சாலையிலிருந்து நேற்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர்.

 

சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே  விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

 

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக எட்டு கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விடுலை செய்யபட்டுள்ளனர்.