கொல்லநுலை தேவிலாமுனையில் மகாபாரதம் 17ம், 18ம் போர் அரங்கேற்றம்

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு, தேவிலாமுனை கிராமத்தில் மாகாபாரத்தின் 17ம், 18ம் போர் வடமோடி கூத்து அரங்கேற்ற விழா செவ்வாய்க்கிழமை(09) இரவு தேவிலாமுனையில் நடைபெற்றது..
கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் கூத்தொன்றினை ஆடி குறித்த மக்கள் அரங்கேற்றி வருகின்றனர்..


விழாக்குழுவின் தலைவர் எஸ்.பரமேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்ற அரங்கேற்ற விழாவின் ஆரம்ப நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.ருபேசன் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.