பட்டிப்பளை கல்வி வலயத்திற்கு சொந்தமான கட்டிடத்தினை பொலிஸார் விடுவிக்க வேண்டும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பட்டிப்பளை கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரியர் மத்திய நிலையத்திலிருந்து பொலிஸாரை வெளியேற்ற வேண்டுமென மகிழடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு நிகழ்வில், கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்..

மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

வடக்கு, கிழக்கு பகுதிகளிலே, தனியார் மற்றும், அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் பலவற்றில் இராணுவ நிலையங்களும், பொலிஸ் நிலையங்களும் அமையப்பெற்றுள்ளன. அவ்வகையில்தான் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தின் பட்டிப்பளையில் அமையப்பெற்றுள்ள ஆசிரியர் மத்திய நிலையத்தினை, பொலிஸ் நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். இக்கட்டிடத்திலிருந்து பொலிஸாரை  அகற்றி கட்டிடத்தினை கல்வி நிலையம் பெற்றுக் கொள்வதற்கான வேலைகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும். என்றார்.