முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.

(படுவான் பாலகன்) முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.

பதவி ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக முறைகேடான விதத்தில் ஏனைய சகோதர  இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது என கிழக்கு மாகாணசபையின் பிரதித்தவிசாளரும், மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்..

மகிடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு வலய விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.

ஒரு பதவிக்கு வருவதற்கு, முறைகேடான முறையில் ஏனைய சகோதர இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது. என்பதை கல்விமான்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு அபிவிருத்தி குழுக்கூட்டமொன்றில், மாகாண கல்வி அமைச்சரையும், மாகாணசபை உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவரை முறைகேடான விதத்தில் கொண்டுவருவதாக கூறி அமைச்சர் ஒருவர் கொச்சைப்படுத்தியிருந்தார். எந்த பதவியாகவிருந்தாலும் அவற்றினை முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து முறைகேடாக உள்நுழைய கூடாது எனவும் மேலும் கூறினார்.