மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தொடங்கிய பெருமை பிள்ளையானையே சாரும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தொடங்கிய பெருமை முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானையே சாரும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயமட்ட விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை(08) மாலை நடைபெற்ற நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்..

மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பல நெருக்கடிக்குள் மத்தியிலும், வளங்கள் இல்லாத நிலையிலும் இவ் வலயம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இறுதியான வலயமாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக கடந்த காலங்களில் நாம் அனைவரும் விட்ட தவறுகளை இனங்கண்டு வலயத்தின் அடைவினை மேல்நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இவ்வாறான பின்தங்கிய வலயங்களுக்கு ஆசிரியர்கள், அதிபர்கள் விரும்பி சேவை செய்ய வருவதென்பது மிகவும் குறைந்தளவிலே இருக்கின்றது. அவ்வாறான நிலையிலும் இங்கு சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றார்..