கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபாரில்; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என  அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது,  இந்த நியமனம் 5 வருட காலத்துக்குரியதாகும். மட்டக்களப்பு பழுகாமத்தை பிறப்பிடமாகக்கொண்ட இவர் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழையமாணவராகும். –