மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டுப் போட்டி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயமட்ட விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
வலயத்திற்குட்பட்ட 67பாடசாலைகளின் கொடிகளுடன், தேசிய, மாகாண, வலய, கோட்ட கொடிகளும் ஏற்றப்பட்டன. விளையாட்டு வீரர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, பண்பாட்டு ஊர்வலங்களும் மைதானத்தினை வலம் வந்தன.
இதன்போது, ஓட்ட நிகழ்வுகளும், கரப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றன. மேலும் கரடியநாறு பாடசாலை மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்..

 

 

வலய அனைத்து விளையாட்டுப்போட்டிகளிலும் அதிகூடிய புள்ளியாக 165இனை பெற்று வலயத்தில் முதலிடத்தினை அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

வலயப் போட்டிகளில் பங்கேற்று அதிகூடிய புள்ளிகளை பெற்ற பாடசாலைகளுக்கும், மூன்று போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.