மகிழடித்தீவில் அல்லி நாடகம் அரங்கேற்றம்

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு கிராம மக்களினால் புதிதாக பழக்கப்பட்ட அல்லி தென்மோடிக் கூத்து அரங்கேற்ற நிகழ்வு திங்கட்கிழமை இரவு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

ஒரு வருட காலமாக பழக்கப்பட்ட குறித்த கூத்தில், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துசாராரும் பாத்திரமேற்று ஆடியிருந்தனர்.

அரங்கேற்ற விழாவின் ஆரம்ப நிகழ்வுக்கு பேராசிரியர் சி.மௌனகுரு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்..