மத்தியஅரசும் மாகாணஅரசும் எங்களை ஏமாற்றப்பார்க்கிறது. – அம்பாறை பட்டதாரிகளின் ஆக்ரோசம்!

காரைதீவு  நிருபர் சகா
 
மத்தியஅரசும் கிழக்கு மாகாணசபையும் ஆளுக்கொரு கதையைச்சொல்லி பட்டதாரிகளான எங்களை ஏமாற்றப்பார்க்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.2012முதல் 2016வரையுள்ள சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வழங்கும் வரை எமது போராட்டம் ஓயாது..
 
இவ்வாறு இன்று (08) திங்கட்கிழமை 71வது நாளாக காரைதீவில் சத்தியாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் ஆக்ரோசமாகத் தெரிவித்தனர்.
 
 
இன்று  திங்கட்கிழமை பெருந்தொகையான பட்டதாரிகள் கடும் வெப்பத்திற்கு மத்தியிலும் குழுமியிருந்தனர்.தகரமிட்ட அக்கூடாரத்தினுள் சில நிமிடங்கள்கூட நிற்கமுடியாது நிலைமை.ஆனால் அவர்கள் வைராக்கியத்துடன் தொழில்கிடைக்கும்வரை அங்கேயே இருப்போம் எனக்கூறி கருத்துரைத்தனர்.
 
அவர்கள் மேலும் கூறுகையில்:
 
பிரதமர் ரணில்விக்ரமசிங்க ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிழக்கில் தொழில் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். நாம் வெறும் 1000பேருக்கு மட்டும் தொழில்கிடைப்பதற்காக 71நாட்களாக இப்போராட்டத்தை நடாத்தவில்லை. எங்களை ஏமாற்ற முடியாது.
 
எங்களில் அனைவருக்கும் அதாவது 2012முதல் 2016வரையுள்ள அனைத்துபட்டதாரிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி தொழில் வழங்கவேண்டும்.இதுவே எமது இறுதி கோரிக்கை. அதுவரை எமது போராட்டம் தொடரும். இந்நிலையில் 1000பேருக்கு தொழில்தருவதாகக்கூறி எம்மை மழுப்பமுடியாது.குழப்பவும் முடியாது.
 
இதேவேளை கிழக்குமாகாண முதலமைச்சர் 4ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்நியமனம் தருவதாகக்கூறுகின்றார். இன்னும் திறைசேரி அதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. எனவே எம்மை மீண்டும் ஏமாற்றப்பர்க்கிறார் முதலமைச்சர். சீண்டாதீர்கள்.
நாம் தனியே ஆசிரியர் நியமனத்தைமட்டும் கேட்கவில்லை.நாட்டிலே இருக்கக்கூடிய ஏனையதுறைகளிலும் உள்ள வெற்றிடங்களுக்கு எம்மை நியமிக்கலாம்.
 
நாட்டுக்காக சேவையாற்ற தயார்!
 
குறிப்பாக ஒருதுறையை இதுவரை யாரும் கவனிக்கவில்லை. நாட்டிள்ள முப்படையின்h பொலிசார் இராணுவம் போன்ற துறைகளிலுள்ள பட்டதாரி வெற்றிடங்களுக்கு எங்களை நியமியுங்கள். 30வயதுக்குட்பட்ட நாங்கள் செல்லத்தயாராக இருக்கின்றோம். நாட்டுக்கு சேவையாற்றவிருக்கின்றோம். எனவே எங்களை அத்துறைகளில் சேருங்கள் எனக் கேட்கின்றோம்.
 
மேலும் பாடசாலைகயில் விளையாட்டு பயிற்சி நிபுணர்களாக பட்டதாரிகளை அதுவும் சுமார் 2000பேரளவில் சேர்க்கவிருப்பதாக அறிகின்றோம். அதற்கு எங்களில் பொருத்தமானவர்களை நியமியுங்கள். எங்களில் தேசியரீதியில் விளையாட்டுத்துறையில் பதக்கம்பெற்ற பட்டதாரிகள் உள்ளனர்.
 
எனவே இன்னுமின்னும் மத்தியஅரசும் மாகாணஅரசும் எங்களை சாட்டுச்சொல்லி காலத்தைக்கடத்தலாம் அல்லது எங்களை ஏமாற்றலாம் அலல்து எங்களைப் பிரித்துப்பார்க்கலாம் என்று பகற்கனவு காணாதீர்கள். அனைவருக்கும் தொழில் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். என்றனர்.