பிள்ளைகள் உயிருடன் இல்லை என்றால் அதனை அறிவியுங்கள்

சண்முகம் தவசீலன்

தொழில்செய்து குடும்பங்களை பொருளாதார ரீதியாக முன்னெடுத்துச்செல்லக்கூடிய பிள்ளைகளை தொலைத்துவிட்டு கையேந்தும் சமுதாயமாக வாழ்ந்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டுள்ளளோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 62 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் என்ற காரணத்தினாலேயே தான் தமக்கு இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமது பிள்ளைகள் உயிருடன் இல்லை என்றால் அரசாங்கம் அதனை தெரியப்படத்தவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.