வெசாக் பண்டிகையை முன்னிட்டுமாபெரும் வெசாக் நிகழ்வுக்கான ஏற்பாடுகள்

 

சண்முகம் தவசீலன்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவம் விமானப்படை கடற்ப்படை முல்லைதீவு பொலிஸார் உள்ளிட்டோர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாக மாபெரும் வெசாக் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்

வழக்கமாக இந்நிகழ்வுகளை நடாத்தும் இடங்களுக்கு அண்மையில் மக்களது தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இம்முறை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாக இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.